நான்கு குழந்தைகளுடன் தன்னை தவிக்க விட்டுச் சென்ற கணவனைப் பழிவாங்குவதற்காக ஆறு குழந்தைகளின் தாயாகிய ஒரு பெண் கணவன் வளர்த்த மீன்களை பிளீச்சிங்கை ஊற்றி கொன்ற சம்பவம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Serena Reynoldson (35) ஆறு குழந்தைகளின் தாய். அவளது கணவனான John Fitzpatrickக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டதால் John நான்கு குழந்தைகளையும் மனைவியையும் விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
அது முதல் மோசமான குறுஞ்செய்திகளை கணவனுக்கு அனுப்புவது Serenaவின் வழக்கம்.
இந்நிலையில் ஒரு நாள் கணவன் ஆசையாக வளர்த்த மீன்கள் இருக்கும் தொட்டியில் பிளீச்சிங்கை ஊற்றி அதை வீடியோ எடுத்து கணவனுக்கு அனுப்பினாள் Serena.
அந்த வீடியோவில் பிளீச்சிங்கை ஊற்றும்போது அவள் சாவுங்கள், சாவுங்கள் என்று கூறிக் கொண்டே பிளீச்சிங்கை ஊற்றுவதும், நான் வாழ்க்கையில் பொழுதுபோக்குகளை அனுபவிக்க முடியாது என்றால் நீயும் அனுபவிக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டே பிளீச்சிங்கை ஊற்றுவதும் அவை மீன்கள் சாகவில்லை என்பது தெரிந்ததும் இவை சாகவே சாகாதா? என்று கேட்டு அவை சாகும் வரை இன்னும் பிளீச்சிங்கை ஊற்றுவதும் பதிவாகியுள்ளன.
அந்த வீடியோ வந்ததும் அது குறித்து பொலிசில் புகாரளித்தார் John. விசாரணையில் தான் மீன்களைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வறு செய்ய வில்லை என்றும், கணவனைப் பிரிந்ததால் ஏற்பட்ட கோபத்திலேயே அவ்வாறு செய்ததாகவும் Serena தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதை ஏற்க மறுத்து Serenaவுக்கு 18 வாரங்கள் சிறைத்தண்டனை அளித்துள்ள நீதிமன்றம் அவள் வாழ்நாள் முழுவதும் மீன்களை வளர்க்க தடை விதித்துள்ளதோடு, 415 பவுண்டுகள் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.