சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி மு.க.அழகிரியின் அமைதி பேரணி தொடங்யுள்ளது.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவுக்கு பின்னர் ஸ்டாலின் அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் ஸ்டாலினின் சகோதரரான அழகிரி ஸ்டாலினை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த நிலையில் தன்னை கட்சியில் மீண்டும் சேர்க்க கோரினார்.
ஆனால் இது குறித்து எதுவும் ஸ்டாலின் பேசாமல் உள்ள நிலையில், திமுகவின் உண்மையான விசுவாசிகள் தன்பக்கம் உள்ளதாக அழகிரி கூறினார்.
மக்கள் கடலுக்கு இடையே,
வங்கக் கடலை நோக்கி,
தலைவரை வணங்க,
மு.க.அழகிரியின் அமைதி ஊர்வலம்.#MKAlagiri | #kalaignar #Karunanidhi | #SilentProcession pic.twitter.com/7bUtPKMLxR
— Dhaya Alagiri (@dhayaalagiri) September 5, 2018
தனது பலத்தை நிரூபிக்க லட்சம் தொண்டர்களுடன் கருணாநிதியின் நினைவிடம் நோக்கி பேரணி செல்வேன் என கூறிய அழகிரி அதன்படி தற்போது அமைதி பேரணியை தொடங்கியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி காவல் அருகே துவங்கிய இந்த பேரணியில் அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கருப்பு சட்டை அணிந்தவாறு பங்கேற்றனர்.
பேரணி காரணமாக வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த ஏராளமானோர் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.
மரணித்த பின்னும் மெரினாவை போராடி வென்ற ஓய்வறியா போராளி கலைஞருக்கு மு.க.அழகிரியின் அமைதி ஊர்வலம் இனிதே தொடங்கியது. #MKAlagiri | #kalaignar #Karunanidhi | #SilentProcession pic.twitter.com/a2dPohWV4C
— Dhaya Alagiri (@dhayaalagiri) September 5, 2018
மு.க.அழகிரி அமைதி பேரணி….!
நல்ல கூட்டத்தை காட்டி இருக்கிறார் என்றே தோன்றுகிறது. pic.twitter.com/0QLDHWaCEy
— Abdul Azeez S.A. (@saazeez12) September 5, 2018