படிப்பிடிப்பின் போது, நடிகை ஒருவர் பயத்தில் டெல்லிக்கு பறந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் படப்பிடிப்பே நிறுத்தப்பட்டுள்ளது…
மலை உச்சியில் நடிக்க பயந்தமையினால் யாருக்கும் தெரியாமல் நடிகை இவ்வாறு ஓட்டம் பிடித்துள்ளார்.
அவளுக்கென்ன அழகிய முகம் என்ற படத்தின் படப்பிடிப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த படத்தை இயக்குனர் ஏ.கேசவன் இயக்கி வருகிறார். நடிகை அனுபமா பிரகாஷ் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று கொடைக்கானல் மலை உச்சியில் இடம்பெற்றுள்ளது.
மலை உச்சியில் நடனமாடும் காட்சிக்கு படகுழு தயாராகிய போது, நடிகை யாருக்கு சொல்லாமல் தலைமறைவாகியள்ளார்.
பின்னரே அவர் மலை உச்சிக்கு பயந்து மீண்டும் டெல்லிக்கே சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது. இதனால் படகுழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.