தனுஷ் மற்றும் விஜய் நீண்ட கால நண்பர்களாகும். இவரும் சினிமா துறையில் சாதித்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இருவரும் மோதி கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
தனுஷ் – நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் நிறைவுக்கு வந்துள்ளர். நீண்ட நாட்களுக்கு பின்னர் இப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது…
கௌதம் மேனன் இயக்கத்தில் இந்த படம் தயாராகியுள்ளது.
எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பு முழுவதும் முடிந்ததாக இயக்குநர் கௌதம் மேனன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சசிக்குமாருக்கு நன்றி கூறி கேக் ஒன்று வெட்டப்பட்டது.
குறித்த கேக்கில் தீபாவளி வாழ்த்துக்கள் 2018 என எழுதப்பட்டிருந்தது.
இதனால் இத்திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கமைய தனுஷ் – விஜய் மோதி கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.