Loading...
யாழ் செய்திகள்:யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கஞ்சா போதைப் பொருளை, விற்பனை செய்யும் நோக்குடன் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
Loading...
சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (4) செவ்வாய்க்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போதே 5 சந்தேகநபர்களும் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Loading...