மருத்துவம்:நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உணவை பொறுத்தவரையில் பல பிரச்சினை உள்ளது.
ஒரு சிலருக்கு பசியே எடுக்காது, இன்னொரு சிலருக்கு உணவை பார்த்தாலே வெறுப்பாக இருக்கும்.
அதிலும் சிலருக்கு சாப்பிட்டு முடித்த உடனேயே பசி உணர்வு ஏற்படும். இது போன்ற பசி எடுப்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் குறிப்பாக பார்த்தால் வைட்டமின் குறைவு தான்.
இதை தடுக்கும் வழிமுறைகள் :
காலை உணவு என்பது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க கூடியது. எனவே காலை உணவை எக்காரணத்தை கொண்டும் தவிர்க்க கூடாது.
காலையில் எழுந்ததும் உடலில் நீர்சத்துகள் மிகக் குறைவாக இருக்கும். பசி உணர்வை ஏற்படுத்த காலையில் எழுந்தவுடன் ஒரு டம்பளர் தண்ணீர் அருந்த வேண்டும்.
தேவையான உணவை சாப்பிட்ட பிறகும் உங்களுக்கு அடிக்கடி பசி ஏற்பட்டால் உடனடியாக ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். உடனடியாக உங்கள் பசி காணாமல் போய்விடும்.
அடிக்கடி பசி ஏற்பட காரணம்:-
மனஅழுத்தம் : அலுவலகத்தில் அதிக மனஅழுத்தம் ஏற்படுகிறதா? இதுதான் பசி எடுக்க முக்கிய காரணமாம். மனஅழுத்தம் இருந்தால் அது உங்களிடையே அதிகம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும்.
அதிகமான மனஅழுத்தம் ஏற்படும்போது அது கார்டிசோல் என்னும் ஹார்மோனை சுரக்கும். இந்த சுரப்பினையானது இனிப்பு, கொழுப்பு போன்ற உணவுகளை உண்ண தூண்டக்கூடிய ஹார்மோனாகும்.
தொடர்ந்து எந்நேரமும் பசியாக இருப்பது சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
இதுபோன்று தொடர்ந்து பசி அதிகம் எடுக்க காரணம் சர்க்கரை நோயாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உங்களின் தூக்கமின்மை கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.