ஹைதராபாத்: நடிகைக்கு எளிதில் கிடைக்கும் விஷயம் அவரின் கணவருக்கு எட்டாக்கனியாக உள்ளது.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஒரு நடிகை ஆந்திராவில் பெரிய குடும்பத்தை சேர்ந்த நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை தொடர்ந்து நடித்து வருகிறார்.
சொல்லப் போனால் திருமணத்திற்கு பிறகு அவர் தொடர்ந்து ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
நடிகையின் கணவருக்கோ ஹிட் என்பது எட்டாக்கனியாக உள்ளது. அதற்காக அவர் இதுவரை நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவே இல்லை என்று கூறவில்லை. அவர் நடிப்பில் ஹிட்டான படங்கள் இயக்குனர்கள், சக நடிகர்கள் அல்லது ஹீரோயின்களுக்காக ஹிட்டாகியுள்ளது. நடிகரும், அவரது மனைவியும் சேர்ந்து நடித்த படம் கூட ஹிட்டானது. ஆனால் படம் இயக்குனருக்காக ஓடியது என்று கூறிவிட்டார்கள்.
நடிகர் தனது குடும்பத்தோடு நடித்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. நடிகரின் நடிப்பை பலரும் பாராட்டினாலும் படம் அவருக்காக ஓடவில்லை. மாறாக அவரின் அப்பா, தாத்தாவுக்காக ஓடியது என்று கூறப்பட்டது. மேலும் நடிகரின் மனைவியும் அந்த படத்தில் அசத்தலாக நடித்திருந்தார். அதனால் நடிகரின் பெயர் பெரிதாக எடுபடவில்லை. அவர் நிலைமை பாவமாக உள்ளது.
மலையாளத்தில் பட்டையை கிளப்பிய லவ் படத்தை தெலுங்கில் இந்த நடிகரை வைத்து ரீமேக் செய்தார்கள். ஆனால் மலையாளம் அளவுக்கு தெலுங்கில் படத்திற்கு வரவேற்பு இல்லை. இந்நிலையில் நடிகரின் கெரியரை தூக்கி நிறுத்தப் போகிறேன் என்ற பெயரில் அவரின் மனைவி ஸ்க்ரிப்ட்டில் எல்லாம் தலையிடுகிறாராம். இது எங்கு போய் முடியப் போகுதோ என்று திரையுலகினர் முனுமுனுக்கிறார்கள்.
இந்த நடிகருக்காகவே ஓடிய படம் என்று சொல்லும்படி எந்த படமும் இல்லை. இந்நிலையில் நடிகரின் படம் ஒன்று அடுத்த வரம் ரிலீஸாக உள்ளது. அந்த படத்தில் நடிப்புக்கு பெயர் போன ராஜமாதா உள்ளார். எனவே, படம் ஹிட்டானால் ராஜமாதாவுக்காக ஹிட்டானது என்ற பெயர் வந்துவிடும். இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் அடுத்த வாரம் ரிலீஸாகிறது. நடிகரின் முந்தைய படங்களில் ரிலீஸ் தேதி தள்ளிப் போன படங்கள் படுதோல்வி அடைந்துள்ளன. அதனால் அந்த சென்டிமென்ட் படி இந்த படமும் தோல்வி அடைந்துவிடுமோ என்ற பயமும் உள்ளதாம்.