மனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம்.அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையும் உண்டு.
அதுபோல, தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.இன்றைய தினத்தில், நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில், அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது.அந்த வகையில், இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
மேஷம்
முயற்சிகள் வெற்றி அடையும். அரசு சம்மந்தமான வேலைகள் எளிதில் முடியும் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். கோபத்துடன் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.
ரிஷபம்
புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பேச்சினால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.
மிதுனம்
எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். எதிரிகள் பணிந்து போவார்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.
கடகம்
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். காலையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவில் கவனம் தேவை. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் யோகம் உண்டாகும்.
சிம்மம்
இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். தெய்வக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.
கன்னி
அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படு கிறது. வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.
துலாம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
விருச்சிகம்
சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக பணியாளர்களால் சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி இருக்கும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும்.
தனுசு
அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
மகரம்
உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும்.
கும்பம்
இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து நல்ல தகவல் வரும். செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்க நேரும். பயணத்தின்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும்.
மீனம்
எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். பிற்பகலுக்குமேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் பற்றுவரவு சுமாராகத்தான் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் சிறு பிரச்னை ஏற்படக்கூடும்.