கள்ளக்காதலுக்காக ஈவு இரக்கமின்றி பெற்ற இருகுழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தற்போது சிறையில் இருக்கும் அபிராமி செய்த டப்ஸ்மாஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து பொலிசாரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. சுந்தரம், அபிராமி இருவரையும் பொலிசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
அபிராமி தொடர்புடைய பல விவகாரங்கள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கிறது. அவர் குழந்தைகளுடன் இருக்கும் ஒரு வீடியோ ஏற்கெனவே இணையத்தில் வெளியானது.
இந்நிலையில், மியூசிக்கலி ஆப்பில் அவர் செய்துள்ள டப்ஸ்மாஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வீடியோவை பார்த்த பலரும், அபிராமிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.