குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
சுந்தரம், அபிராமி இருவரையும் பொலிசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். அபிராமி தொடர்புடைய பல விவகாரங்கள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பொலிசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் அபிராமி கூறுகையில், ‘நான் குழந்தைகளுக்கு கொடுத்தது தூக்க மாத்திரைகள் அல்ல. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை கொடுத்தேன். என்னிடம் 5 மாத்திரைகள் இருந்தது. அதிகமான மாத்திரைகளை கொடுத்தால் இறந்துவிடுவார்கள் என நம்பி பாலில் கலந்து கொடுத்தேன். ஆனால், என் கணவருக்கும், மகனுக்கும் எதுவும் ஆகவில்லை” என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மனைவியால் மரணமடைந்த தனது இரு குழந்தைகளையும் அடக்கம் செய்த போது இரு குழந்தைகளையும் கட்டி அணைத்துக் கொண்டு அபிராமியின் கணவர் விஜய் கதறி அழுதது அங்கிருந்த அவரின் உறவினர்கள் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. குழந்தைகளை அடிக்க கூட மாட்டேளே. ஆனால் கொலை செய்து விட்டாளே! எட்டு வருட காதல் வாழ்கை பறிபோனது பற்றி கூட எனக்கு கவலையில்லை. என் குழந்தைகளை இல்லாமல் செய்து விட்டாளே. அவர்களுக்கு விஷம் கொடுக்க அவளுக்கு எப்படி மனம் வந்தது? படுக்கை அறை சென்று பார்த்திருந்தால் ஒரு குழந்தையாவது காப்பாற்றி இருப்பேனே! என அவர் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.