பிக்பாஸ் சீசன் 2 இல் பங்குபற்றிய நடிகரும், ஸ்டன்ட் கலைஞருமான பொன்னம்பலம் சுமார் ஐந்து வாரங்கள் தாக்குப்பிடித்து பிக்பாஸ் வீட்டை வெளியேறினார். வெளியேறிய அவர் இன்னும் பிக்பாஸ் மூட்டில் இருந்து வெளி வரவில்லை என்றே தோன்றுகிறது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் முதல் முறையாக, காட்டேரி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அதன் போது, இந்தப்பட ஷூட்டிங் முடிந்த நான்காவது நாளே படக்குழுவினர் யாருக்கும் சொல்லாமல் சஸ்பென்சாக பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டாராம் என தெரிவித்தார். அத்துடன் அடிக்கடி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியே குறிப்பிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பட்ட பெயர்கள் போட்டியாளர்களுக்கு வைத்தது போல், காட்டேரி பட இயக்குனர் டீகேவுக்கு டிராகுலா கிங் எனும் பட்டப் பெயரை வைத்தார்.
அவர் இவ்வாறு பேசியதும், பொன்னம்பலம் சித்தப்பா பிக் பாஸ் மூடில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.