பிக்பாஸ் வீட்டில் தற்போது கொடுக்கப்பட்ட டாஸ்கின் படி, தன்னை நாமினேசனிலிந்து காப்பாற்ற இன்னொருவரை பிக்பாஸ் சொல்லும் டாஸ்க் செய்ய வைக்கணும். அந்த டாஸ்குகள் மற்றவர்களை பாதிப்பிற்குள்ளாக்கிற போல இருக்கிறது.
அந்த வகையில் மும்தாஜ் நாமினேசனிலிந்து தன்னை காப்பாற்ற விஜய லட்சுமியை ஒரு பாத் டப்பிலுள்ள மாட்டு சாணத்தில் மூழ்க வைக்க வேண்டும் என்பதாகும். அந்த விசயத்தை மும்தாஜ் சொல்ல அதற்கு விஜயலட்சுமியும் சம்மதிக்கிறார். அதன்பிறகு பாத் டப்பில் கிடந்த படி கண்ணீர் விட்டு அழுகிறார் விஜயலட்சுமி.
அந்த சமயம் ‘இதே போல விஜயலட்சுமிக்காக நான் இப்படியெல்லாம் எதுவும் செய்ய முடியாது, விஜயலட்சுமி நாமினேட் செய்யப்படட்டும்’ என கூறுகிறார் ஐஸ்வர்யா. மேலும், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.