பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளரான ஆர்த்தி பிக்பாஸ் 2 ஆவது சீசன் பற்றி தொடர்ந்து விமர்சனம் வெளியிட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக பிக் பாஸுக்கு ஐஸ்வர்யா மீது தனி பிரியம் என்பதை புரிந்து வைத்துக் கொண்டு கலாய்க்கிறார்.
பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றி பார்வையாளர்கள் நினைப்பதை வீடியோவாக போட்டியாளர்களுக்கு போட்டுக் காட்டினார் பிக் பாஸ். அதை தான் ஆர்த்தி விளாசி பதிவிட்டுள்ளார்.
டாஸ்க் உல்டாவா சொல்லிட்டீயேமா? ஐஸ்வர்யா தத்தா நல்லா பொழச்சுப்ப…நல்லா புரிஞ்சு புரியாத மாதிரி நடிப்பு யம்மாடி, ஐஸ்வர்யா தத்தா ஆர்மி கவலைப்படாதீங்க டைட்டில், வீடு, பிக் பாஸ் எல்லாம் அவங்களுக்கு தான் என்று செமயாய் கலாய்த்துள்ளார் ஆர்த்தி.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர்கள் யாரும் ஆர்த்தி கலாய்க்கிற அளவுக்கு கலாய்த்தது இல்லை. பிக்பாஸ் ஐஸ்வர்யாவை தொடர்ந்து காப்பாற்றி வருகிறார் என்பது பார்வையாளர்களின் கருத்து. இந்நிலையில் பிக் பாஸே ஐஸ்வர்யாவுக்குத் தான் என்று ஆர்த்தி தில்லாக டுவீட் செய்துள்ளார்.