Loading...
கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களாக தனுஷ், மேகா ஆகாஷ் நடித்து வந்த படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. ஒருவழியாக தற்போது ரிலீஸ் திகதியை மறைமுகமாக அறிவித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு செவ்வாயன்று முடிவுக்கு வந்தது. படப்பிடிப்பு நிறைவு நாளை முன்னிட்டு ‘ஹேப்பி தீபாவளி’ என்ற கேக்கை வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர்.
Loading...
தீபாவளி நாளன்று விஜய்யின் ‘சர்கார்’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படமும் ரிலீஸ் ரேசில் இணைந்துள்ளது.
தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா நடித்துள்ள இந்த படத்தில் இயக்குனர் சசிகுமார் வில்லனாக நடித்துள்ளார். தர்புகா இசையில் உருவாகியிருக்கும் இந்த படம் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம் ஆகும்.
Loading...