பிரபல பெங்காலி நடிகை Payel Chakraborty, ஹோட்டல் அரை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பெங்காலி நடிகையான Payel Chakraborty (34), தனது கணவரை விவாகரத்து செய்த பின்னர் 3 வயது மகனுடன் வசித்து வருகிறார்.
Siliguri பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தனி அறை ஒன்று எடுத்து தங்கியிருந்த Payel, தான் Gangtok செல்ல உள்ளதால் செவ்வாய்க்கிழமை மாலை அறையை காலி செய்வதாக நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.
ஆனால் மாலை நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. அடுத்தநாள் விடுத்தும் கூட அவர் வெளியில் வராததால், சந்தேகமடைந்த நிர்வாகிகள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து விரைந்து வந்த பொலிஸார் அறையின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபொழுது, Payel தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்.
பின்னர் அவரது உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுகுறித்து வழக்கு பதவி செய்த போலிஸார், நடிகையை செல்போன் ஆய்வுகளை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.