பிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை செய்துகொண்ட வழக்கில் நடிகருக்கு வழங்கப்பட்ட சிறிய தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரிய திரையில் துணை நடிகையாகவும், சின்ன திரையில் பல்வேறு தொடர்களிலும் நடித்து மிகவும் பிரபலமானவராக இருந்தவர் நடிகை வைஷ்ணவி.
இவர் கடந்த 2006-ம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வைஷ்ணவியின் தற்கொலைக்கு நடிகர் தேவ் ஆனந்த் தான் காரணம் என கூறி அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில், ஏற்கனவே திருமணமான நடிகர் தேவ், தங்களுடைய மகளை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் தான் தற்கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது என குறிப்பிட்டிருந்தனர்.
இதனை விசாரித்து வந்த சென்னை மகளிர் நீதிமன்றம், தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவ் ஆனந்த் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன், தேவ் ஆனந்துக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபொழுது, நடிகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.