இங்கிலாந்து வீரர் அலஸ்டெய்ர் குக் அண்மையில் தனது ஓய்வை அறிவித்திருந்தார். எனினும் ஓய்வு பெறும் விடயத்தை பியர் குடித்தே சக வீரர்களிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
33 வயதான இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலஸ்டெய்ர் குக், இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் திடீரென தனது ஓய்வை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து குக் கூறுகையில், “வார்த்தைகளால் கூறுவது கடினம், கிட்டத்தட்ட 6 மாதங்களாக ஓய்வு பெறுவது குறித்து சிந்தித்து வந்தேன். மனதளவில் எப்போது பலமாக இருப்பேன். எனினும் தற்போது அது அது முடியவில்லை. இதனால் முதலில் ரூட் இடம் ஓய்வை பற்றி குறிப்பிட்டேன்.
பின்னர், பயிற்சியாளரிடம் இது தொடர்பில் தெரிவித்தேன். ஆனால், சக வீரர்களிடம், தெரிவிக்கும் முன் இரண்டு பியர் குடித்து தான் தெரிவித்தேன்.
அதை குடிக்காமல் இருந்தால், நிச்சியம் கண் கலங்கிவிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.