மன அழுத்தம், கடந்த நான்கு நாட்களாக உணவு எடுத்துக் கொள்ளாதது என அபிராமி நேற்று இரவு சிறையிலேயே மயங்கி விழுந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலில் விஷம் கலந்து சொந்த பிள்ளைகளை கொலை செய்த அபிராமி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் கடந்த 4 நாட்களாக யாருடனும் அபிராமி பேசுவதில்லையாம். யாராவது பேசினாலும் அவர்களிடம் முகம் கொடுத்து கூட அவர் பேசுவதில்லை என கூறப்படுகிறது.
சக கைதிகளின் நச்சரிப்பு தாங்கமுடியவில்லை என புகார் தெரிவித்துள்ள அபிராமி தன்னை தனிச்சிறையில் அடைக்குமாறு சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு அபிராமி சிறையில் மயக்கமுற்று விழுந்துள்ளார்.
இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவரை காண்பித்த போது அவர் கடந்த 4 நாட்களாக உண்ணாமல், தூங்காமல் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதால் இந்த மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முதலுதவிக்கு பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். “குழந்தைகளை கொன்றுவிட்டேனே காமம் என் கண்ணை மறைத்து விட்டதே” என கைது செய்யப்பட்ட போது பொலிசாரிடம் அபிராமி அழுதது குறிப்பிடத்தக்கது.