முருகதாஸ் இயக்கத்தில் விஜய் சர்க்கார் படத்தில் நடித்து வருகின்றார். படப்பிடிப்புகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் விஜய் குறித்த பிரபல நடிகை ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.
பிரபல நடிகை துளசி, இப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார். சங்கராபரணம் படத்தில் அறிமுகமாகி பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
“விஜய்யுடன் தற்போது தான் முதல் முறையாக நான் நடித்துள்ளேன். தன்னை தன் சொந்த அம்மா போலவே அவர் கவனித்துக்கொண்டார், என்னுடைய மகன் பற்றி கேட்டு தெரிந்துகொள்வார்.
சினிமாவை கற்றுக்கொள்ள சொல்லுங்கள் என கூறுவார்.. யாரிடமாவது உதவி இயக்குனராக பணியாற்ற கூறுங்கள் என கூறினார். அம்மா என்றே ஸ்பாட்டில் எப்போது கூப்பிடுவார். விஜய்யிடம் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அந்த தருணங்களை மறக்க முடியாது” என துளசி கூறியுள்ளார்.