கொழும்பில் நேற்றைய தினம் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக கர்ப்பிணித் தாய் ஒருவர் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளதாக பொரலெஸ்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தெரியவருவதாவது,
கொழும்பு மாவட்டம் பெல்லன்வில – ஸ்ரீ சோமரத்ன மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீப்பரவலுக்கான காரணம், அவரது வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட வாயுக் கசிவு என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இரண்டு மாடிகளை கொண்ட குறித்த வீட்டின் மேல்மாடியில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவத்தில் மருத்துவர்களான குறித்த பெண்ணும் அவரது கணவரும் ஐந்து வயதான மகனும் படுகாயமடைந்தனர்.
ஆனாலும் குறித்த பெண் அவ்விடத்திலேயே உயிரிழந்ததுடன் கணவர் மற்றும் மகன் ஆகியோர் களுபோவில மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தம் தொடர்பில் நீதவான் பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அரச பகுப்பாய்வாளர் அந்த இடத்திற்கு வருகை தரவுள்ளதாக பொலிஸார் கூறினர்.