பிரச்சினை அதிகரித்து விட்டாலே எல்லோரும் முதலில் நாடிச் செல்வது மாத்திரைகளை மட்டுமே. ஆனால் அவை போதியளவு தீர்வைத் தருவதில்லை. ஆனால் சில இயற்கை முறையினால் மாத்திரைகளைக் காட்டிலும் விரைவான தீர்வைத் தருகின்றது.
உணவு சமிபாடு அடையவில்லையென்றால் வயிற்றில் வலி, கோளாறுகள் ஏற்படுவது சகஜமானதே. இதற்கான காரணம் என்னவென்றால் காரமான உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல், சாப்பிட்ட உடன் தூங்குதல், புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல், சில மருந்துகள் உட்கொள்ளுதல் போன்றவையே. இதனால் புற்றுநோய் வருவதற்கான நிலையையும் அதிகமாகவே உள்ளது.
சமிபாட்டு பிரச்சினை ஏற்பட்டாலே வயிறு ஊதுதல், பவாந்தி, நெஞ்செரிச்சல், வயிற்றெரிச்சல் இரத்த வாந்தி போன்ற அறிகுற்கள் தென்பட ஆரம்பித்து விடுகிறது.
இயற்கையாகவே சமிபாட்டு பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி?
1. ஆப்பிள் சிடர் விநாகிரி.
ஆப்பிள் சிடர் விநாகிரியில் உள்ள அசட்டிக் அமிலம் வயிற்றில் உள்ள அமிலத் தன்மையைக் குறைப்பதன் மூலம் சமிபாட்டை அதிகரிக்கச் செய்யும்.
2 தேக்கரண்டி ஆப்பிள் சிடர் விநாகிரியினை சூடான நீரில் கலந்து, அதில் சிறிதளவு தேனும் சேர்த்துக் குடிப்பதனால் சமிபாட்டு பிரச்சினைத் தீரும்.
2.பால்.
கொழுப்பகற்றிய பாலை தினமும் இரு தடவைகள் குளிரான நிலையில் குடிப்பதனால் வயிற்றின் அமிலத் தன்மை குறைவதுடன் சமிபாடடைவதை அதிகரிக்க்கும்.
3.புதினா டீ.
புதினா வயிற்றின் தசைகளை ஆறுதல் படுத்தி சமிபாட்டை அதிகரிக்கச் செய்யும்.
ஆறு புதினா இலைகளை எடுத்து சூடான ஒரு கோப்பை நீரில் போட்டு 10 நிமிடங்கள் ஊற விடவும். அந்த நீருடன் சிறிதளவு தேனைக் கலந்து தினமும் குடித்து வந்தால் சிறப்பானது.
4.தேன்.
தேனைப் பயன்படுத்துவதனால் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் சமிபாட்டை அதிகரிக்கச் செய்யும்.