குட்கா உற்பத்தியாளர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்ட விரோதமாக உற்பத்தி மற்றும், விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குட்கா உற்பத்தியாளர் மாதவராவ் குடோனில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில், ஜார்ஜ் பெயரும் இருந்ததால் சிபிஐ நேற்று முன்தினம் அவர் வீட்டில் ரெய்டு நடத்தினர்.
ஜார்ஜ் வீடு மட்டுமின்றி தற்போதைய காவல் ஆணையர், சுகாதார துறை அமைச்சர், காவல்துறை உயர் அதிகாரிகள் என சுமார் 40க்கும் மேற்பட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சிபிஐ தமிழக அரசியல் மற்றும் அரசுத்துறை வட்டாரத்தில் பலத்த அதிர்வலைகளை கிளப்பியிருந்தது.
இந்த நிலையில், தன் மீதான புகார்கள் குறித்து விளக்கமளித்துள்ளார் காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ். குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் காலங்களில் நான் பதவியில் இல்லை என தெரிவித்துள்ள அவர், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அன்பழகன் எனது பெயரை மனுவில் குறிப்பிட்டுள்ளார். நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் குட்கா விவகாரத்தில் தன் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது