மன்னாரில் நேற்று எழும்புக்கூடு அகழ்வு பணிகளின் இறுதி நேரத்தில் மண்டையோடு ஒன்று வெட்டு தழும்புகளுடன் மீட்டொடுக்கப்பட்டுள்ளனார்.
மேலும் குறித்த வெட்டு தழும்புடன் உள்ள மண்டையோட்டின் வெட்டானது பிரோத பரிசோதனையின் போது ஏற்பட்டதா? அல்லது கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டபோது ஏற்பட்டதா? அல்லது வேறு விதமாக ஏற்பட்டதா என்பது தொடர்பான விடயங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து மன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் எலும்புக்கூடுகள் மீட்க்கப்பட்டு வருகின்றது. மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புதிய மனித எலும்புக்கூடுகள்; அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறாக புதிய மனித எச்சங்கள் ,எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையினால் அகழ்வு பணிகள் முடிவின்றி தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.
இன்று வியாழக்கிழமை 66 வது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வுப் பணிகள் இடம் பெற்று வருகின்றது.
விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது நிலையில் இதுவரை குறித்த வளாகத்தில் 120 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் 114 மனித எலும்புக்கூடுகள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாள் அகழ்வு பணியின் போதும் புதிதாக மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்படுவதனால் அப்புறப்படுத்தும் பணிகளை முழுவதுமாக முடிப்பதில் தாமதம் காணப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று பணிகளின் இறுதி நேரத்தில் மண்டையோடு ஒன்றின் பகுதியில் வெட்டு தழும்பு ஒன்று காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.