Loading...
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மகிழுர் கிராமத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் முதலையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்
சுந்தரலிங்கம் நவேந்திரன் – 42 என்ற 2 பிள்ளைகளின் தகப்பனான மீனவர் ஒருவரே இன்று காலை மீன் பிடிக்க சென்ற போது முதலையின் தாக்குதலுக்குள்ளாகி உயிர் இழந்துள்ளதாக முதற்க்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. மீட்கப்பட்ட சடலத்தில் கை துண்டாடப்பட்டுள்ளது என
களுவாஞ்சி குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த சடலம் வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...
Loading...