சர்கார் படத்தில் பிஸியாக நடித்து வரும் நடிகர் விஜய் அரசியலுக்கு வர இரகசியமாக திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ரஜினி, கமலுக்கு அடுத்து அவரும் இணையவுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களின் மறைவிற்குப் பின் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமையை பயன்படுத்தி அரசியலில் ஈடுபட சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் விஷால், ஆகியோார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு ஈடுபட ஆயத்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்கார் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ராதாரவி, இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“அரசியலுக்குள் நுழைய விஜய் இரகசியமாக திட்டமிடுவது நன்றாக தெரிகிறது. சர்கார் படத்தில் அரசியலுக்கான அனைத்து விடயங்களையும் விஜய் கற்று வருகின்றார்” என ராதாரவி குறிப்பிட்டுள்ளார்.