10-09-2018 திங்கட்கிழமை இன்றைய ராசி பலன்கள். விளம்பி வருடம், ஆவணி மாதம் 25ம் திகதி, துல்ஹஜ் 29ம் திகதி, 10-09-2018 திங்கட்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி இரவு 10:16 வரை;
அதன் பின் துவிதியை திதி, பூரம் நட்சத்திரம் காலை 7:21 வரை; அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30-9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : சதயம்
பொது : சூரியன் வழிபாடு.
மேஷம்:
வெற்றி நோக்கில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலம் உண்டாகும். ஆதாயம் அதிகரிக்கும்.
பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பர். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.
ரிஷபம்:
பிறர் சொல்லும் அவதுாறு பேச்சை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது.
பெண்கள் அதிக பயன்தராத பொருள் வாங்குவதை தவிர்க்கவும். தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.
மிதுனம்:
பேச்சு, செயலில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறு சரி செய்வதால் வளர்ச்சி சீராகும்.
மிதமான லாபம் கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும்.
கடகம்:
கருணை நிறைந்த மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். பணவரவு அதிகரிக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர்.
சிம்மம்:
உங்கள் மீது சிலர் பொறாமை கொள்வர். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. லாபம் சுமாராக இருக்கும்.
பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்பட நேரிடலாம். உறவினர் வகையில் உதவி கிடைக்க வாய்ப்புண்டு.
கன்னி:
நண்பரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவால் வளர்ச்சி பெறும்.
தாயின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வெகுநாள் எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர்.
துலாம்:
உறவினரிடம் பேச நினைத்த விஷயம் மாறி போகலாம். தொழில்,வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகும்.
திடீர் செலவால் சேமிப்பு கரையும். பணியாளர்கள் விழிப்புடன் பணிபுரிவது அவசியம். மாணவர்கள் சாகச விளையாட்டுக்களை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்:
கடந்த கால உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் கூடுதல் உழைப்பால் சீராகும். முதலீட்டை அதிகப்படுத்த கடன் பெறுவீர்கள்.
பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். மாணவர்களுக்கு படிப்பில் தேர்ச்சி விகிதம் கூடும்.
தனுசு:
எதிர்மறையாக இருந்த சூழ்நிலை மறையும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற தகுந்த பணிகளில் ஈடுபடுவீர்கள்.
லாபம் உயரும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். அரசு தொடர்பான உதவி பெற அனுகூலம் உண்டு.
மகரம்:
உங்கள் மனதில் சோர்வு ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும்.
பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். மனைவியின் ஆறுதல் வார்த்தை நிம்மதி தரும்.
கும்பம்:
பேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் குளறுபடி சரிசெய்ய புதிய அணுகுமுறை தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும்.
பெண்கள் அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
மீனம்:
நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்திட கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும்.
பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.