அடக்க முடியாத வெறித்தனமான ஆசையே குழந்தைகளை கொடூரமாக கொலை செய்ய அபிராமியை தூண்டியுள்ளது. என்று பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளது.
கடந்த 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொலைசெய்த அபிராமியை யாவரும் அறிந்ததே.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்சியை நடத்தி வந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டி ஒன்றில் மேற்கண்ட வாறு கூறிஉள்ளனர்.
அதில் அபிராமி செய்த செயலை என்னால் நம்ப முடியவில்லை. இயற்கையாகவே ஒரு தாய் தன்னுடைய குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றே நினைப்பாள்.
அபிராமி குழந்தைகள் மேல் பாசம் இல்லாதவராக இருந்தால் குழந்தையைப் பெற்று வளர்த்திருக்க மாட்டாள்.
அவள் இவ்வாறு நடந்து கொள்ள முக்கிய காரணம் ஒரு வேளை மன ரீதியாக தெளிவில்லாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது வேறு ஏதாவது பிரைச்சினை இருந்திருக்க வேண்டும்.
தன்னுடைய மனதை அடக்க முடியாத அளவுக்கு அபிராமிக்கு வெறித்தனமாக ஆசை இருந்திருக்க வேண்டும்.
தன்னுடைய ஆசை கண்ணை மறைத்து குழந்தைகள் மற்றும் கணவரை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.
கள்ளக்காதலால் சில கணவர்கள் தனது மனைவியை கொலை செய்ய திட்டம் போட்டவர்களே தவிர யாரும் தனது குழந்தையை கொல்ல வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.
ஆனால் அபிராமி இப்படி செய்ததை என்னால் இப்போது கூட நம்ப முடியவில்லை என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.