அமெரிக்காவில் இருந்து பிரித்தானியாவுக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில், திடீரென்று உடைகளை கழட்டிவிட்டு விமானி தூங்கச் சென்ற சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நியூ ஜெர்சியிலிருந்து கிளாஸ்கோ நகர் செல்லும் United Airlines பயணிகள் விமானத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
நியூ ஜெர்சியிலிருந்து கிளாஸ்கோ வரையான 7 மணி நேர விமான பயணத்தின் இடையே குறித்த விமானி ஒரு மணி நேரம் தூங்கியதாக கூறப்படுகிறது.
முதல் வகுப்பு பகுதிக்கு வந்த அந்த விமானி தமது சீருடைகளை கழட்டிவிட்டு தூங்கச் சென்றுள்ளார். இதை கவனித்த பயணிகள் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சமுற்றதாக கூறப்படுகிறது.
UA161 என்ற அந்த பயணிகள் விமானமானது லிபர்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலையில் பிரித்தானியா வந்து சேரும்.
இதனிடையே பறக்கும் விமானத்தில் பயணிகளின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் விமானி தூங்கச் சென்ற காட்சியை முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் படம் பிடித்து வெளியிட்டிருந்தார்.
மட்டுமின்றி ஒரு மணி நேர தூக்கத்திற்கு பின்னர் மீண்டும் அவர் பணியில் ஈடுபட்டுள்ளதாக அந்த முன்னாள் பொலிஸ் அதிகாரி வெளிப்படுத்தியிருந்தார்.
இச்சம்பவம் பயணிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து குறித்த விவகாரம் தொடர்பில் United Airlines நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்