அமெரிக்காவில் தன்னுடைய மகள் இறந்த செய்தியை நினைவு கூறும் விதமாக, நேரலையில் கண்ணீர் மல்க தொகுப்பாளினி ஒருவர் தெரிவிக்கும் வீடியோ காண்போர் கண்களை கலங்க வைக்கிறது.
அமெரிக்கவின் South Dakota-வை சேர்ந்த பத்திரிக்கையாளர் Angela Kennecke (52). இவர் கடந்த 29 ஆண்டுகளாக KELO தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமையன்று தொலைக்காட்சியில் தோன்றிய Angela, அதிகப்படியான போதைப்பொருளால் தன்னுடைய மகள் உயிரிழந்தது பற்றி நேரலையில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
I’m issuing a personal plea to end the stigma surrounding addiction and a call for action regarding the opioid crisis! pic.twitter.com/Ayxlf43UQm
— Angela Kennecke (@AngelaKennecke) September 5, 2018
போதை பொருள் கலாச்சாரத்தால் அடிமையாக்கப்பட்டு பலரும் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாவதை பற்றிய ஏராளமான அறிக்கைகளை நாங்கள் உங்களுக்கு சமர்பித்திருக்கிறோம்.
இந்த முறை என்னுடைய தனிப்பட்ட முறையில், என் வீட்டிலே நிகழ்ந்த ஒரு துன்பகரமான நிகழ்வை பற்றி பேச உள்ளேன்.
கடந்த மே 16-ம் தேதியன்று என்னுடைய 21 வயது மகள் எமிலி அதிகபடியான போதைப்பொருள் எடுத்துக் கொண்டதால் இறந்து விட்டார். திடீரென நடந்த அந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வு, அப்படியே என்னுடைய வாழ்க்கையினை தலைகீழாக மாற்றிவிட்டது.
என்னுடைய விருப்பம் எல்லாம் என்னுடைய மகளின் கதையை உங்களிடம் பகிர்வது மட்டும் தான் என தெரிவித்துள்ளார்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான Angela, தற்போது Emily’s Hope என இறந்த தன்னுடைய மகளின் பெயரில் ஒரு நிதி நிறுவனத்தை நடத்தி, போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, போதை பொருளால் அமெரிக்காவில் மட்டும் சராசரியாக ஒரு நாளைக்கு 155 பேர் உயிரிழக்கிறார்கள் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.