Loading...
கோண்டாவிலில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடந்த நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவு பழுதடைந்திருந்தன என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அது தொடர்பில் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு அறிவித்தனர். சுகாதாரப் பரிசோதகர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகள் மேற்கொண்டனர்.
Loading...
அங்கு சற்றுப் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதால் பொலிஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
700 பேருக்கான உணவுக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது என்றும், பரிமாறப்பட்ட உணவு பழுதடைந்திருந்தது என்றும் கூறப்படுகின்றது.
Loading...