நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஓவியாவுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று நகைக் கடை ஒன்றை திறந்து வைப்பதற்காகவே ஓவியா இலங்கைக்கு வந்துள்ளார்.
அந்த வகையில், இன்று காலை செட்டியார் தெருவுக்கு வந்த ஓவியாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன், ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக ஓவியாவை வரவேற்றுள்ளனர்.
இதன்போது இலங்கையில் இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என தான் நினைத்துப் பார்க்கவில்லை எனவும், தனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும் ஓவியா தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கைக்கான இந்த விஜயம் தமக்கு இரண்டாவது பயணம் எனவும் ஓவியா தெரிவித்துள்ளார்.
மேலும், ஓவியாவை பார்ப்பதற்காக தலைநகரில் பெருந்திரளான மக்கள் கூடியுள்ளதுடன், செல்ஃபி எடுப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது