டந்த வருட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 5 பேர், தற்போது ‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ் 2’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் இந்த நிகழ்ச்சி, இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜனனி, ரித்விகா, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, பாலாஜி, மும்தாஜ், விஜயலட்சுமி ஆகிய 7 பேரும் போட்டியாளர்களாகக் களத்தில் நிற்கின்றனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றாயன் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த வருடம் போட்டியாளர்களாகப் பங்கேற்ற சினேகன், காயத்ரி ரகுராம், வையாபுரி, சுஜா வருணி, ஹார்த்தி ஆகிய 5 பேரும் ‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
அவர்களைப் பார்த்ததும் தற்போதிருக்கும் போட்டியாளர்களுக்கு அவ்வளவு சந்தோஷம். மகிழ்ச்சியுடன் கட்டித்தழுவி அவர்களை வரவேற்றனர்.
ஐஸ்வர்யா தத்தாவை கன்னத்தை வருடி நெட்டி முறித்த ஹார்த்தி, ‘தமிழ்நாட்டின் திருமகளே… ‘பிக் பாஸ்’ வீட்டின் மருமகளே…’ என்று சொல்ல, ஐஸ்வர்யா முகத்தில் அவ்வளவு வெட்கம்.
இந்த புரமோ வீடியோ இன்று வெளியாகியிருப்பதால், என்ன நடந்தது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்க்கலாம்.