Loading...
கல்முனையை அடுத்துள்ள சவளைக்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவரும் காயமடைந்துள்ளார்.
உந்துருளியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியர்களே அரசாங்க பேருந்தொன்றை முந்தி செல்ல முற்பட்ட வேளை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
Loading...
மேலும் குறித்த இருவரும் கணவன், மனைவி என்பதோடு, 41 வயதான ஆசிரியரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த ஆசிரியை கல்முனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
Loading...