இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் 13-வது அதிபராக ஆரிப் ஆல்வி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சாகிப் நிஸார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பல் மருத்துவரான ஆரிப் ஆல்வி 1969-ல் மாணவர் இயக்கத்தில் சேர்ந்து, பின்னர் முழு நேர அரசியல்வாதியானார். லாஹூரில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது அவர் மீது இனம் தெரியாதவர்களால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது.
பல்வேறு இயக்கங்களில் இருந்த ஆல்வி, இம்ரானுடன் நெருக்கமானார். தற்போதைய பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கட்சி தொடங்கியபோது கட்சியைப் பலப்படுத்த ஆல்வி உதவியாக இருந்தார். அது மட்டுமன்றி
2006 முதல் 2013 வரை கட்சியின் பொதுச் செயலராக பணியாற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.