தற்காலத்தில் ஏற்படும் அதிக உயிரிழப்புக்கள், மதுபானம் குடிப்பதாலேயே நிகழ்வதாக பல ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக இள வயதுடையோர் மதுபானத்திற்கு அடிமையாகி தமது வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளும் அவல நிலை அதிகமாகி விட்டது.
இந்த நிலையில் மதுபானத்தை அருந்துபவர்களைப் பற்றி அண்மையில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் நம் இறப்பு மற்றும் நோய்களுக்கு காரணமாகும் எல்லாப் பொருள்களிலும், அதிக இடத்தைப் பிடிப்பது மதுபானம் தான் என்ற அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உலகில் மூவரில் ஒருவர் மதுபானத்தை எடுத்துக்கொள்வதாகவும், இதில் ஆண்களே அதிகம் எனவும் தெரியவந்துள்ளது. அத்துடன் 15 முதல் 49 வயதுடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இவர்களில் 4 சதவீத பெண்களும், 12.2 சதவீத ஆண்களும் உள்ளதாக குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.