11-09-2018 செவ்வாய்க்கிழமை இன்றைய ராசி பலன்கள். விளம்பி வருடம், ஆவணி மாதம் 26ம் திகதி, துல்ஹஜ் 30ம் திகதி, 11-09-2018 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, துவிதியை திதி இரவு 8:43 வரை;
அதன் பின் திரிதியை திதி, உத்திரம் நட்சத்திரம் காலை 6:20 மணி வரை; அதன்பின் அஸ்தம் நட்சத்திரம் நாளை அதிகாலை 5:15 மணி வரை, அமிர்த, சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி
பொது : சந்திர தரிசனம், ஐயப்பன் வழிபாடு.
மேஷம்:
சமூகத்தின் பார்வை உங்கள் மீது பதியும். திட்டமிட்ட உழைப்பினால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள்.
பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். வழக்கு, விவகாரத்தில் அனுகூலம் ஏற்படும்.
ரிஷபம்:
சொந்த பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். லாபம் சுமார்.
இஷ்ட தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும். மாணவர்கள் கூடுதல் பயிற்சியால் தேர்ச்சி பெறலாம்.
மிதுனம்:
எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். நண்பர்களிடம் அளவுடன் பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறுகளை சரி செய்வீர்கள்.
மிதமான பணவரவு கிடைக்கும். உடல்நலம் பெற மருத்துவ சிகிச்சை உதவும்.
கடகம்:
செயல்களில் மதிநுட்பம் நிறைந்திருக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து வளரும். நிலுவைப் பணம் வசூலாகும்.
மனைவியின் பாசத்தால் மனம் மகிழ்வீர்கள். பெண்கள் விருந்து, விழாவில் குடும்பத்துடன் பங்கேற்பர்.
சிம்மம்:
எதிலும் முன்யோசனையுடன் நடப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உருவாகிற குளறுபடியை தாமதமின்றி சரி செய்யவும்.
மிதமான பணவரவு கிடைக்கும். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
கன்னி:
பணிகளில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும்.
பணியாளர்கள் சலுகை பெறுவர். அரசு சார்ந்த உதவி பெற அனுகூலம் உண்டு.
துலாம்:
சிலர் உங்களை குறை சொல்லலாம். .அதிக உழைப்பு மட்டுமே தொழில் வளர்ச்சி பெற உதவும். பணத்தேவை அதிகரிக்கும்.
பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை. மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.
விருச்சிகம்:
எண்ணம், செயல் உற்சாகத்துடன் இருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும்.
தாராள பணவரவால் விரும்பிய பொருள் வாங்குவீர்கள். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும்.
தனுசு:
வெகுநாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். தாராளமான பணவரவு கிடைக்கும்.
பணியாளர்கள் பாராட்டுடன் வெகுமதி பெறுவர். இயலாதவர்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள்.
மகரம்:
திட்டமிட்ட செயல் நிறைவேற தாமதமாகலாம். உறவினர்களிடம் இதமான அணுகுமுறை பின்பற்றவும்.
தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். அரசு வகையில் உதவி கிடைக்கலாம்.
கும்பம்:
மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நிம்மதிக்கு வழிவகுக்கும்.
தொழில், வியாபாரத்தில் தடை குறுக்கிட்டாலும் ஆதாயம் குறையாது. பெண்கள் அதிக பயன் தராத பொருட்களை வாங்க வேண்டாம்.
மீனம்:
உற்சாகத்துடன் பணியில் ஈடுபடுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து வாழ்க்கைத் தரம் உயரும்.
உபரி பணவரவால் சேமிப்பு கூடும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.