சிறுமியர் காப்பகம் ஒன்றில் சிறுமியரை பாதுகாப்பார் என்று எண்ணப்பட்ட ஒரு முதியவர், பிள்ளைகள் அவரை அப்பா என்று அழைத்த நிலையிலும் அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுமிகள் மூவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கனடாவின் Calgari பகுதியிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் வசிக்கும் Kenneth Alfred Jenkinson (71) என்பவர் அங்கு சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
9 வயது சிறுமி ஒருவர் தன்னிடம் தொடர்ந்து Kenneth தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பிள்ளைகள் Kennethஐ Kenn அப்பா என்று அழைப்பார்களாம், ஆனால் அந்த முதியவரோ மூன்று சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
அந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறியதையடுத்து அவர்கள் பொலிசில் புகாரளித்தனர்.
அந்த சிறுமியின் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு போட்டு காட்டப்பட்டது.
வீட்டின் கீழறையில் நான் என்ன வேலை செய்கிறேன் என்பதைக் காட்டுகிறேன் வா, என்று அந்த சிறுமியை Kenneth அழைத்துச் சென்றுள்ளார்.
அவளுக்கு அந்த இடம் பிடிக்காததால் அங்கிருந்து செல்ல விரும்புவதாக கூறியிருக்கிறாள்.
அப்படியானால் என்னைக் கட்டிப் பிடித்து விட்டு செல் என்று கூறியிருக்கிறார் Kenneth.
பிறகு அவளை மடியில் அமர்த்திக் கொண்ட Kenneth இருமுறை அவளைக் கட்டியணைத்திருக்கிறார்.
பின்னர் தனது சட்டைக்குள் அவர் கைவிட்டு தவறான இடத்தில் தொட்டதாகவும் அது அவளுக்கு பிடிக்கவில்லை என்றும் அவள் மிகவும் பயந்து போனதாகவும் அந்த சிறுமி தெரிவித்தாள்.
இது பல முறை நிகழ்ந்ததாக தெரிவிக்கும் அவள், சொல்லப்போனால், தான் அந்த காப்பகத்தில் இருந்த ஒவ்வொரு நாளும் இது நிகழ்ந்தது என்கிறாள்.
இந்த வீடியோ நீதிபதி முன்பு காட்டப்பட்டபின், வழக்கறிஞர் இதில் ஏதாவது மாற்றிச் சொல்ல விரும்புகிறாயா என அந்த சிறுமியிடம் கேட்க அவள் இல்லை என்று கூறினாள்.
இதேபோல் புகாரளித்துள்ள மேலும் இரண்டு சிறுமிகளிடமும் அவள் பேசிக் கொண்டிருந்ததால், அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து திட்டமிட்டு இதுபோல் புகார் கூறினார்களா என எதிர் தரப்பு வக்கீல் கேட்டபோது இல்லை என மறுத்தாள் அவள். Kenneth மீது மூன்று சிறுமிகளை பாலியல் ரீதியாக தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் விசாரணை தொடர உள்ள நிலையில், ஜாமீனில் விடப்பட்ட Kenneth, 16 வயதுக்கு கீழுள்ள எந்த சிறுமிகளிடமும் பேசக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.