இந்தியா சென்றிருக்கும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார்.
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே மூன்று நாள் பயணமாக தற்போது இந்தியா சென்றுள்ளார்.
இந்த பயணத்தில் அவர் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன் ஒருகட்டமாக இன்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துள்ளார்.
ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலரையும் சந்தித்தார். இந்த சந்திப்பில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் உடன் இருந்தார்.
நேற்று பிரதமர் மோடி மற்றும் ராஜபக்சே சந்திப்பு நடந்த நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வருகிறார் ராஜபக்சே.
பிரதமர் மோடி சார்பாக ராஜபக்சேவிற்கு பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது முக்கிய பாஜக தலைவர்களும் உடன் இருந்தனர். பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரிலேயே ராஜபக்சே இந்தியா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் நடைபெறும் சுப்பிரமணியன் சுவாமியின் விழா ஒன்றில் கலந்துகொள்ளும் பொருட்டு இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.