சர்வதேச அளவில் ஆசிரியர்களின் தரத்தை ஒப்பிடுகையில் சுவிஸ் ஆசிரியர்கள் மிகவும் சிறப்பாக செயல்படுவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில் சுவிஸ் ஆசிரியர்கள் கூட்டமைப்பானது தங்கள் ஆண்டு வருவாயை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளது.
வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பு ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சர்வதேச அளவில் 30 நாடுகளில் உள்ள ஆசிரியர்களை ஒப்பிடுகையில் முதல் மூன்று இடங்களில் ஒன்றில் சுவிஸ் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் லக்சம்பர்க் ஆசிரியர்களே சுவிஸ் ஆசிரியர்களை விடவும் அதிக ஊதியம் பெறுகின்றனர். ஜேர்மனியில் இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கான ஊதியம் மட்டுமே சுவிட்சர்லாந்தை விடவும் அதிகம்.
சுவிஸ்ஸில் துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஆண்டுக்கு சுமார் CHF 100,641 ஊதியமாக பெறுகின்றனர். மேலும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஆண்டுக்கு சுமார் CHF 135,961 ஊதியமாக பெறுகின்றனர். அதேப் போன்று மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் CHF 118,293 ஊதியம் பெறுகின்றனர்.
சுவிஸ் ஆசிரியர்களை பொறுத்தமட்டில் அதிகப் பணிச்சுமை இருப்பினும் ஆண்டுக்கு 13 வாரங்கள் விடுமுறையை அனுபவிக்கின்றனர்.
மேலும் பாஸல் மாகாணத்தை பொறுத்தமட்டில் 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஒரு செமஸ்டர் முழுவதும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.