Loading...
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில்உண்ணா நோன்பிருந்து தனது இன்னுயிரைத்தியாகம் செய்த தியாகி திலீபனின் உண்ணாநோன்பு இடம்பெற்று31 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளில்தமிழர் தாயகத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் அணி திரள வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து கைதுசெய்யப்பட்டு சிறிலங்கா அரசபடையினரால் தடுத்துவைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நிலையில்விடுதலையாகியுள்ள முன்னாள் போராளிகள் இணைந்து ஆரம்பித்துள்ள ஜனநாயக போராளிகள்கட்சி தியாகி திலீபனின் நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில் அனைவரையும்ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்திருக்கின்றது.
Loading...
Loading...