Loading...
இளம் பெண்ணொருவரின் உடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் பெரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து குறித்த பெண்ணின் உடலம் மீட்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பெண்ணின் மரணம் கொலையாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Loading...
மரணித்த பெண்ணின் கணவர் ஒரு மென்பொறியாளர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Loading...