பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இதனால் தினமும் பெட்ரொல் மற்றும் டீசல் விலை உயர்வு ஏற்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் 238% விலை உயர்வை கண்டுள்ளது. தற்போது வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உள்ள்து.
நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.05 க்கு விற்கப்பட்டது. இன்று அது மேலும் உயர்ந்து லிட்டருக்கு ரூ.84.19 க்கு விற்கப்படுகிறது. அதே போல் நேற்று லிட்டருக்கு ரூ. 77.13 காசாக இருந்த டீசல் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது. இன்று டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.25 ஆகி உள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் விலைவாசி உயர்வு கடுமையாக இருக்கும் என அச்சம் கொண்டுள்ளனர். வாகன ஓட்டிகளும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் விரைவில் இந்த விலை ரூ.100 ஐ தொடும் என கூறி உள்ளனர்.