அழகு என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சீனப் பெண்கள் தான். அவர்களின் மாசு மருவற்ற முகமும், சரியான தோல் நிறமும் அவர்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.
அவர்கள் எந்த அழகு சாதனப் பொருட்களும் அணியாமலே அழகாக காட்சி அளிக்கக் கூடியவர்கள். வயதான பெண்களிலிருந்து இளமைப் பெண்கள் வரை ஓரே மாதிரியான சரும நிறத்தை பெற்றிருப்பார்கள்.
அவர்களுக்கு சீக்கிரம் வயது எட்டுவதும் கிடையாது. சீனப் பெண்கள் அழகாக இருக்க காரணமான பண்டைய சீன அழகு ரகசியத்தை கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சீன அழகு முறைகள் நமக்கு உறுதியளிக்கும் மிகச் சிறந்த முறையாகும்.
ன பெண்கள் இவ்ளோ அழகா இருக்க தமிழர்கள் தூக்கி எறியும் அரிசி கழுவிய தண்ணீர்தான் காரணமாம்
மினுமினுப்பான சருமத்திற்கு
அரிசி கழுவிய தண்ணீர்
சீனப் பெண்களின் அழகில் அரிசி தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அரிசி தண்ணீர் நம் சருமத்தில் ஏற்பட்டுள்ள கருமையை போக்கி சரும நிறத்தை மேம்படுத்துகிறது.
மேலும் சருமம் பட்டு போன்று மென்மையாக இருக்கவும் உதவுகிறது. அரிசி தண்ணீர் சரும சுருக்கங்கள் மற்றும் சருமம் வயதாகுவதை தடுக்கிறது. மேலும் சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பை சரி செய்கிறது.
பயன்படுத்தும் முறை
அரிசியை கொஞ்சம் நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அந்த தண்ணீர் அப்படியே பால் மாதிரி மாறும் வரை ஊற வைக்கவும்.
இப்பொழுது இந்த தண்ணீரில் பஞ்சியை நனைத்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் அப்ளே செய்யுங்கள். அப்புறம் மீதமுள்ள தண்ணீரை பிரிட்ஜில் வைத்து பிறகு கூட நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.