பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கொடுத்த டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் ஃபைனலுக்கு நேரடியாக செல்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அனைத்து போட்டியாளர்களும் கஷ்டப்பட்டு நேற்றைய டாஸ்க்கில் விளையாடினர். நேற்று ஒளிபரப்பான காட்சி வரை ஒவ்வொரு போட்டியாளரின் கையில் கொடுக்கப்பட்டிருந்த கண்ணாடி கோப்பையின் தண்ணீர் கொட்டாமல் அனைவரும் விளையாடினாலும் ஒவ்வொருவராக வெளியேற கடைசியில் யாஷிகா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி மட்டுமே போட்டியை தொடர்ந்தனர்.
இதை தொடர்ந்து இன்று வெளியான புரோமோவின் படி, யாஷிகா மற்றும் ஜனனி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாடிய போதிலும் இறுதியில் ஜனனி வெற்றி பெற்று ஃபைனலுக்கு தகுதி பெற்றுவிட்டார்.
இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஜனனியை அடுத்து இன்னும் மூன்று போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
பெரும்பாலும், இனிவரும் வாரங்களில் ஐஸ்வர்யா, மும்தாஜ், பாலாஜி ஆகியோர் வெளியேறினால் ஃபைனலுக்கு ஜனனி உட்பட ரித்விகா, விஜயலட்சுமி மற்றும் யாஷிகா தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.