யுவன் யுவதி போன்ற தமிழ் மற்றும் பல்வேறு மலையாள படங்களில் நடித்திருப்பவர் ரிமா கல்லிங்கல். இவர் அவ்வப்போது சமூக சேவைகளில் ஈடுபடுவதுடன், சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்தும் கருத்துக்கள் வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அதற்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இவர் ஒருபடி மேலே சென்று நேரடியாகவே ஓரின சேர்க்கையாளர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார். கேரள, கொச்சியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் அடிக்கடி சந்தித்து பேசுவார்கள். அந்த இடத்துக்கு ஏற்கனவே பலமுறை சென்று அவர்களுடன் பேசி பழகி வந்திருக்கிறார் ரிமா.
ஓரின சேர்க்கையாளர்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து குறிப்பிட்ட இடத்துக்கு சென்ற ரிமா, அங்கிருந்த ஓரின சேர்க்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டார். சுமார் 2 மணி நேரம் அவர்களுடன் மனம் திறந்து பேசி விட்டு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அரசியல் காரணங்களுக்காகவே அல்லது அவரும் அப்பிடியே என சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.