பிரேசில் நாட்டில் உறவுக்கு மறுப்பு தெரிவித்த மனைவியை கொடூரமாக தாக்கிவிட்டு ஆறு மாத பிஞ்சு குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரேசிலின் Luziania பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தன்று அதிக மது போதையில் இருந்த மேயோன் சில்வா(25) போதை மருந்தும் பயன்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் மனைவி ஜெனிபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சில்வா இறுதியில் உறவுக்கு அழைத்துள்ளார்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஜெனிபர். இதில் ஆத்திரம் அடைந்த சில்வா மனைவியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து கணவரை சமாதானம் செய்ய முயன்றுள்ளார் ஜெனிபர். ஆனால் அதற்குள் துப்பாக்கியை எடுத்த சில்வா மனைவியை கொன்று விடுவேன் என்று கத்தியுள்ளார்.
திடீரென்று தூங்கிக் கொண்டிருந்த அவர்களது 6 மாத குழந்தை மீது துப்பாக்கியை நீட்டிய சில்வா திடீரென்று சுட்டுள்ளார்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஜெனிபர் கதறியுள்ளார். உடனடியாக அண்டை வீட்டார் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, பொலிசார் சம்பவப் பகுதிக்கு விரைந்து வந்தனர்.
இதனையடுத்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சொந்த குழந்தையை கொலை செய்துவிட்டு தப்ப முயன்ற சில்வாவை பொலிசார் கைது செய்துள்ளனர்.