சிபிஎஸ்இ தேர்வில் முதலாவதாக வந்து ஜனாதிபதி விருது பெற்ற கல்லூரி மாணவியை கும்பல் ஒன்று கடத்தி கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் நகரில் வசிப்பவர் குறித்த மாணவி.
சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக ஜனாதிபதி விருது பெற்றவர். இந்த நிலையில் நேற்று சிறப்பு பயிற்சி வகுப்புக்குச் என்று விட்டு குடியிருப்புக்கு திரும்பும் போது அவரை வழிமறித்த மூன்று இளைஞர்கள் வலுக்கட்டாயமாக அவரை ஒரு காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
.இதனையடுத்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ள அவர்கள் அங்கு அவரை அந்த மூவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள வயலில் இருந்த மற்றவர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனிடையே அந்த கல்லூரி மாணவி சுயநினைவை இழக்கவே, அவரை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து தள்ளி விட்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பேசிய குறித்த இளம் பெண், தன்னை பலாத்காரம் செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரை பொலிசார் வாங்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தற்போது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.