இணையத்தளத்துக்கு அடிமையாதல் என்பது, ஒருவித மனநோயாகும் என்று மனநல மருத்துவ ஆலோசகர் டாக்டர் ரமணி ரட்ணவீர ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள நவீன தொழில்நுட்பமானது, கல்வியுடன் ஒன்றிணைந்த ஒரு சாதனமாகும். ஆனால், இது போன்ற இணைய மற்றும் தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல் என்பது, ஒரு நபருடைய மனநலத்தை மிகவும் பாதிக்கும்.
மேலும், தற்போதுள்ள மாணவர்கள், பரீட்சைக்குத் தயாராகும் போது, மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அவர்களை ஒரு நல்ல சூழ்நிலையில் தயார்படுத்துவது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும்.
இதன் மூலம், அவர்களால் இலகுவாக சாதனை படைக்க முடியும்.
கல்விக்கு இணையம் தேவை என்று ஊக்கப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகும். இந்த இணையத்தளத்துக்கு அடிமையாவதன் மூலம், மாணவர்கள் பரீட்சைகளில் தோல்வியடைவது மனநிலை பாதிப்பை ஏற்படுத்தும்.
போதைப்பொருள் மற்றும் மது போன்றவற்றுக்கு அடிமையாவதால் ஏற்படும் நோயைப் போல, இதுவும் உடலுக்கு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
அதிகமாக சமூக வலைத்தளங்களில் தங்களை அதிகம் ஈடுபடுத்தும் மாணவர்களுக்கு, அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இணையத்தளத்துக்கு அடிமையாவது ஒரு மனநோயாகவே கருதப்படுகின்து என்று அவர் தெரிவித்துள்ளார்.