தமிழகத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்துவிட்டதாக கூறி நாடகமாடிய கணவனை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை திரு.வி.க. நகர் கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(33). இரயில்வே ஊழியரான இவருக்கும் கல்பனா(31) என்ற பெண்ணும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 மற்றும் 7 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஆசியர் வேலை செய்து வந்த கல்பனா குழந்தைகளை கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு தன்னுடையை வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து வேலைக்கு செல்லும் சுரேஷ் தினமும் வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். இது குறித்து கல்பனா கேட்ட போது, வேலை அதிகமாக இருப்பதாலே தாமதமாக வருவதாக கூறியுள்ளார்.
இதற்கிடையில் அவர் செல்போனில் வேறு பெண்ணுடன் அடிக்கடி பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் அவ்வப்போது பிரச்சனை எழுந்துள்ளது.
திடீரென்று கடந்த 11-ஆம் திகதி கல்பனா தன்னுடைய வீட்டில் தூங்கில் தொங்கிவிட்டதாக கூறி, சுரேஷ் அருகில் இருப்பவர்களிடம் கூச்சலிட்டுள்ளார்.
உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனிக்கு கல்பனா கொண்டு சென்ற போதும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனிடையே, கல்பனாவின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது அதில், கல்பனா கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது.
இதனால் பொலிசார் சுரேஷிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், கல்பனா அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இதனால் நான் அவளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அதை மூடிமறைப்பதற்காக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடினேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் பின் சுரேஷை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.