Loading...
14 ஆவது ஆசிய கிண்ணத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. 6 அணிகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இன்றைய தினம் இந்த தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இன்று மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய் மற்றும் அபுதாபியிலுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் இந்த போட்டிகள் ஆரம்பமாகும். ஆசிய கிண்ணப் போட்டிகளில் மொத்தமாக 13 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
Loading...
14 ஆவது தடவையாக இன்று ஆரம்பாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரில் ஐ.சி.சி.யின் முழு அங்கத்துவ நாடுகளான
- ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா
- ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான்
- அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை
- மெஸ்ரபி மொட்ராஸா தலைமையிலான பங்களாதேஷ்
- அஸ்கார் ஆப்கான் தலைமையிலான ஆப்பாகிஸ்தான்
- அனுஸ்மன் ராத் தலைமையிலான ஹொங்கொங் அணி
ஆகிய 6 அணிகள் பங்கு கொள்கின்றன.
- குழு ‘A’ யில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங்
- குழு ‘B’ யில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான்
ஆகிய அணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Loading...